| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
170508b ii 000 0 tam d |
| 245 |
: |
_ _ |a தென்முகக் கடவுள் |
| 300 |
: |
_ _ |a சைவம் |
| 340 |
: |
_ _ |a மணல் கல் |
| 500 |
: |
_ _ |a தென்முகக் கடவுள் தனது உடன் கூட்டத்தாருக்கும், உயிர்குலத்தாருக்கும் கல்லால மரத்தின் கீழ் மறையோதிய நிலையில் அமர்வு |
| 510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
| 520 |
: |
_ _ |a தென்முகக்கடவுள் (தட்சிணாமூர்த்தி) கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து நான்மறைகளையும், ஆறங்கங்களையும் உயிர்க்குலத்திற்கு ஓதுவிக்கும் காட்சி. ஆலமர்ச்செல்வன் நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். முன் வலது கை (சின்முத்திரை) காட்டியுள்ளது. பிற கைகள் சிதைந்துள்ளன. ஜடாபாரத்துடன் விளங்கும் நான்மறையோதி வலதுகாலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து வலது தொடையின் மேல் வைத்தபடி உடல் நேராகவும், அமர்வு நிலை ஒரு பக்கமாக சாய்த்தும் உள்ள நிலையில் அமர்ந்துள்ளார். இயல்பாக தென்முகக் கடவுள் அமரும் வீராசனத்தில் இருந்து இந்த அமர்வு நிலை சற்று வேறுபட்டுள்ளது. முப்புரிநூல் வலது கை வழியாக இடது தோளின் வழியே செல்கிறது. ஆலமரத்தில் காட்டப்படும் உயிரினங்கள் சிதைந்துள்ளன. அறியக்கூடவில்லை. வேதவல்லானின் முகமும் சிதைந்துள்ளது.அவரது ஆசனத்திற்குக் கீழே மான்கள் இரண்டு காட்டப்பட்டுள்ளன. மறையோதியின் இடையாடை முடிச்சுகள் ஆசனத்திற்குக் கீழேத் தொங்குகின்றன. கைகளில் கங்கணங்கள் காட்டப்பட்டுள்ளன. கைகளில் உள்ள சின்னங்கள் இன்னதென்று அறியக்கூடவில்லை. சிதைந்துள்ளது. அருகிலுள்ள சிறுகோட்டங்களில் வலது மேற்புறம் சிங்கமும், அதற்குக் கீழே முனிவரும் காட்டப்பட்டுள்ளனர். இறைவனின் இடது மேற்புறம் குகையில் உள்ள வேங்கையும், அதற்கு மேலே தொல்மாந்தரும் காட்டப்பட்டுள்ளனர். |
| 653 |
: |
_ _ |a தென்முகக்கடவுள், தட்சிணாமூர்த்தி, ஆலமர்ச்செல்வன், நான்மறையோதி, வேதவல்லான், மறையோதி, இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள் |
| 700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
| 752 |
: |
_ _ |a பிறவாதீஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
| 914 |
: |
_ _ |a 12.84553813 |
| 915 |
: |
_ _ |a 79.70527813 |
| 995 |
: |
_ _ |a TVA_SCL_000012 |
| barcode |
: |
TVA_SCL_000012 |
| book category |
: |
கற்சிற்பங்கள் |
| Primary File |
: |
TVA_SCL_000012_பிறவாதீஸ்வரர்-கோயில்_தென்முகக்-கடவுள்-001.jpg
|